கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? பாஜவுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி..!

 
1

தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் வக்கீல் ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாலக்கோடு பஸ் நிலையம், ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, பஸ்சில் மகளிர் இலவச பயணம், கல்லூரி பெண்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளார்.

ஆனால், ஒன்றிய பாஜ அரசு அனைவரது வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் செலுத்தப்படும் என கூறியது. ஆனால், அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பெட்ரோல்-டீசல், எரிவாயு சிலிண்டர் விலை பாதியாக குறைக்கப்படும் எனவும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் எதையுமே செயல்படுத்த வில்லை.

சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு இவர்களுக்கு துணையாக இருந்தது அதிமுக.,தான். எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மற்றும் அதிமுகவிற்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். திராவிட மாடல் ஆட்சி நிலைக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.