நடந்தது என்ன..? ஓடாத ரயிலுக்கு முன்பதிவு செய்து ஆன்லைன் மோசடி நடப்பதாக மூதாட்டி புகார் - ரயில்வே விளக்கம்..!

 
1

திருச்சி திருவெறும்பூரில் ஓடாத ரயிலுக்கு முன்பதிவு செய்து ஆன்லைன் மோசடி நடப்பதாக மூதாட்டி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த மூதாட்டி உமா ராமசாமி, திருச்சியில் இருந்து பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். முன்பதிவு டிக்கெட் உறுதியான சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும், பிடித்தம் போக மீதி பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் குறுந்தகவல் வந்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் உமா ராமசாமி பேசிய போது, புக்கிங் செய்த தேதியில் அந்த ரயில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்துள்ள உமா ராமசாமி, ஓடாத ரயிலுக்கு முன்பதிவு செய்து ஆன்லைன் மோசடி நடப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே, 

ரயில் எண்.22498ல் (பிஎன்ஆர் 46157142203 திருச்சியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு 3வது ஏர் வகுப்பில்  உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டை ஐஆர்சிடிசி தனது அனுமதியின்றி ரத்து செய்ததாகக் கூறி திருச்சியில் உள்ள பெண் ஒருவர் அளித்த ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே விசாரணைக்கு பின், பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன:

அவர் தனது அண்டை வீட்டாரான திரு தேவராஜ் மூலம் அவரது தனிப்பட்ட ஐடியிலிருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்தார. ஐஆர்சிடிசி இணையதளப் பதிவுகளில் இருந்து, ஸ்ரீ தேவராஜ் தனது சொந்த ஐடியைப் பயன்படுத்தி ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் தனது டிக்கெட்டை ரத்து செய்ததாகவும், பணத்தைத் திரும்பப்பெறும் தொகை மாற்றப்படும் நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

-எனவே, ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் தானாக ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறியது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உண்மை தகவலை திரு தேவராஜ் அவர்களால் தொலைபேசி மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது