ரயில் விபத்துக்கு காரணம் என்ன? FIR -ல் அதிர்ச்சி தகவல்

 
train accident

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு கொடுத்த புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கவரப்பேட்டை ரயில் விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு.. 20 பேருக்கு தொடர் சிகிச்சை..


இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு கொடுத்த புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாக்மதி எக்ஸ்பிரஸ் கவரைப்பேட்டையில் கிரீன் சிக்னல் போட்ட பின்னர் விபத்துக்குள்ளானதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு ஆபத்தான வகையில் வேகமாக இயக்குதல், கவனக்குறைவு உள்ளிட்ட 4 பிரிவுகளில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிரீன் சிக்னலை லோகோ பைலட்டிற்கு காட்ட அறையை விட்டு வெளியே வந்த போது விபத்து ஏற்பட்டதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு.. 20 பேருக்கு தொடர் சிகிச்சை..


கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் - சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில்  20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மைசூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லும் பாக்மதி விரைவு ரயில்  கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த  சரக்கு ரயில் நேற்று முன் தினம் இரவு மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்றுக்கும் மேற்பட்ட  பயணிகள் ரயில் பெட்டிகளும், 3 சரக்கு ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன.  சரக்கு ரயில் பெட்டியின் மேலே சிக்கிக் கொண்டு தண்டவாளம் மின்கம்பம் போல் காட்சியளித்தது.  அத்துடன் ரயில் தண்டவாளங்களை உடைத்து கொண்டு 2 பெட்டிகளில்  தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடதக்கது.