WHAT BRO ITS VERY WRONG BRO... ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..!
த.வெ.க. ஈரோடு மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்று (வியாழக்கிழமை) பேசுகிறார்.
விஜய் வருகையை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காலையில் இருந்தே தவெக தொண்டர்கள், மக்கள் பொதுக்கூட்ட இடத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் ஈரோடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “ ஈரோடு வரைக்கு வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டிங்களா??.... இங்க இருக்க கரூருக்கு போகல.. ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறிங்க?......... ‘WHAT BRO IT'SVERY WRONG BRO' ஏன்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு போஸ்டரில் “ விஜய் பரிதாபங்கள்... PRESENT .. ‘ஜனநாயகன் டப்பிங், ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா செல்வது, ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது’. ABSENT.. ‘மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது, மக்களை சந்திக்க கரூர் செல்வது, தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது என்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


