‘என்னா நடிப்புடா தம்பி’... புல்லட் நாயகனுக்கு கார் பரிசளித்த லாரன்ஸ்

 
லாரன்ஸ்

"புல்லட்" படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ள தனது தம்பிக்கு ராகவா லாரன்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார்.

Image

இயக்குனராகவும், நடிகராகவும் மற்றும் நடன இயக்குனராகவும் வலம் வரும் ராகவா லாரன்சின் தம்பி எல்வின், இன்னாசி பாண்டியன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள "புல்லட்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ராகவா லாரன்சும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா உள்ளிட்ட பாடங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள இப்படம் உருவாகியுள்ளது.

Image

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, இந்த சிறப்பான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் என் சகோதரன் எல்வினை திரையில் பார்த்தேன். அவரது முதல் படம் புல்லட், அவரது நடிப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது அவருக்கான எனது பரிசு மற்றும் அவரது நடிப்பால் என்னை பெருமைப்படுத்தியதற்காக ஒரு சிறப்பு முத்தம். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். என் சகோதரனுக்கு உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.