பள்ளி திறப்பதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 
school

பள்ளி திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள், பள்ளி திறப்பதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

school

தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பள்ளி திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள், பள்ளி திறப்பதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திறந்தவெளி கிணறு இருக்கக்கூடாது, மின்சாதன பழுதுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகள் இருந்தால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், வகுப்பறைகள் கற்றல் சூழலுக்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும், பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.