தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்னென்ன ஆவணங்களை கட்டாயம் கொடுக்க வேண்டும்?
இந்தியாவில் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ல் நடைபெறுகிறது. இது இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
கட்டம் 1 (2026); வீட்டு பட்டியலிடல் (House Listing), வீடுகள் கணக்கெடுப்பு (Housing Census) மற்றும் தொகுதி வரையறை (Block Enumeration).
கட்டம் 2 (2027); மக்கள்தொகை கணக்கெடுப்பு (Population Enumeration).
Self Enumeration (சுய கணக்கெடுப்பு) வசதி 2027 https://ae.census.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக 17.07.2026 முதல் 31.07.2026 வரை பொதுமக்கள் மேற்காணும் இணையதளத்தில் தங்களது கைபேசி எண்ணை உள்ளீடு செய்தபின் கீழ்க்கண்ட 33 கேள்விகள் அடங்கிய பதிவுத்திரை தோன்றும்:
1. கட்டிட எண் (நகராட்சி அல்லது உள்ளாட்சி அல்லது சென்சஸ் எண்),
2. சென்சஸ் வீட்டு எண்,
3. சென்சஸ் வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள்,
4. சென்சஸ் வீட்டு சுவரின் பிரதான கட்டுமானப் பொருள்,
5. சென்சஸ் வீட்டு கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்.
6. சென்சஸ் வீட்டின் பயன்பாடு.
7. சென்சஸ் வீட்டின் நிலைமை,
8. குடும்ப எண்,
9. குடும்பத்தில் சாதாரணமாக வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை,
10. குடும்பத் தலைவரின் பெயர்.
11. குடும்பத் தலைவரின் பாலினம்,
12. குடும்பத் தலைவர் ஷெ.வகுப்பு (SC) / பழங்குடி (ST) / மற்ற பிரிவைசார்ந்தவரா,
13. சென்சஸ் வீட்டின் உரிமை நிலை,
14. குடும்பத்திற்கான வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை,
15. குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதி(களின்)எண்ணிக்கை,
16. குடிநீருக்கான பிரதான ஆதாரம்,
17. குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்,
18. விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்,
19. கழிப்பிட வசதி,
20. கழிப்பிட வசதியின் வகை,
21. கழிவு நீர் வெளியேற்ற இணைப்பு.
22. குளிக்கும் வசதி,
23. சமையலறை வசதி மற்றும் LPG/PNGஇணைப்பு,
24. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்,
25. வானொலி/டிரான்சிஸ்டர்.
26. தொலைக்காட்சி,
27. இணையதள வசதி,
28. மடிக்கணினி/ கணினி,
29. தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட்போன்,
30. மிதிவண்டி / ஸ்கூட்டர்/ மோட்டார் சைக்கிள்/ மொபெட்,
31. கார்/ ஜீப்/ வேன்,
32. குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம்,
33. கைபேசி எண் (சென்சஸ் சம்பந்தபட்ட தொடர்புக்குமட்டும்)
கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் பதிவுகள் சமர்ப்பித்தவுடன் சமந்தப்பட்ட நபர்களுக்கு சுயக் கணக்கெடுப்பு பதிவு எண்(Self Enumeration-ID) கைபேசிக்கு குறுஞ்செய்தியாக வரப்பெறும். கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அனைவரும் சரியான தகவல்களை வழங்கி, கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பானது மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களால் வீட்டு பட்டியலிடல், வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி வரையறைப் பணி (House Listing. Housing Census & Block Enumeration) போன்ற தகவல்கள் திரட்டுவதை 01.08.2026 முதல் 30.08.2026 வரை மேற்கொள்ளப்படும்.
கணக்கெடுப்பிற்காக வரும் கணக்கெடுப்பாளர்களிடம் பொதுமக்கள் தங்களது சுயக் கணக்கெடுப்பு பதிவு எண் (Self Enumeration-ID)-யை அவர்களிடம் காண்பிக்கவும். மேலும், கணக்கெடுப்பாளர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்துள்ளனரா என உறுதி செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இரண்டாம் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பானது (Population Census) மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களால் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விவரங்களையும் பிப்ரவரி 2027ல் அரசால் அறிவிக்கப்படும் கால அட்டவணையின்படி நடைபெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் சுயக் கணக்கெடுப்பில் ஆர்வமுடன் பங்கேற்று, கணக்கெடுப்பாளர்களுக்கு சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கி, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

