பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் என்னென்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

 
1

1. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசாவில் மினரல் காரிடார் அமைக்கப்படும்.  அதாவது, கனிமவள மையம்  அமைக்கப்படும். அரியவகை கனிமங்களை எடுக்க இந்த மையம் அமைக்கப்படும்.  அரிய வகை கனிம வளங்கை தோண்டு எடுத்து, ஆய்வு, உற்பத்தி  செய்யும் பணிகள் நடக்கும். 

2. நாட்டில் 7 இடங்களில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும். அதாவது, சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை இடையே  அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

3. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொல்லியல் இடமாக ஆதிச்சநல்லூர் விளங்கி வருகிறது. 

4. பொதிகை மலையில் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5. தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6. மாநிலத்தில் உள்ள கோயில் நகரங்கள் உட்பட,  இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7. தமிழ்நாடு உட்பட முக்கிய தேங்காய் உற்பத்தி மாநிலஙுகளில் உற்பத்தியை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் தேங்காய் ஊக்குவிப்பு திட்டம் கொண்டு வரப்படும். இதில்  தேங்காய் உற்பத்தியை பெருக்க, மரக்கன்றுகள் நடப்படும். 

8. ஒடிசாவில் தால்சர் முதல் தமிழகத்தின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை (Inland Waterway) திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

9. நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள், பெண் தொழில்முனைவோரை ஊக்கவிக்க she mart திட்டங்கள்  செயல்படுத்தப்படும். ஏற்கனவே, தமிழக அரசு சார்பில் பெண்களுக்காக பிரத்யேக விடுதிகள் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.