இது என்னப்பா புது ட்விஸ்ட்..! திருமணம் இனியாவுக்கா? பாக்கியாவுக்கா?

இனியா செல்வி மகனான ஆகாஷை காதலிக்கும் விஷயம் அறிந்து குடும்பமே ஸ்தம்பித்து போனது. செல்வியை வீட்டை விட்டு துறத்தியதுடன், செழியன் மற்றும் கோபி ஆகாஷை அடித்துவிட்டார்கள். ஆனால், இனியாவும் ஆகாஷும் இனி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக கூறி வாக்களித்துவிட்டார்கள்.
பிறகு இருவரும் தங்கள் வாழ்க்கையை நன்றாக கடந்துவிட்டதாகவும், இனியா ரிப்போர்டராக வேலை செய்வதாகவும், ஆகாஷ் ஃபெயில் ஆகிவிட்டது போலவும் காண்பிக்கப்பட்டது.
ஏற்கனவே ஒரு முறை இனியாவுக்கு திருமணம் முடிவு செய்து ஈஸ்வரி பல்பு வாங்கிய நிலையில், தற்போது மீண்டும் கல்யாண பேச்சை எடுக்கிறார். இனியா படித்து முடித்துவிட்டதால், ஆகாஷை திருமணம் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் இந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால் பாக்கியா எழில், செழியனின் விருப்ப பெண்களையே திருமணம் செய்து வைத்தது போல், இனியாவிற்கும் ஆகாஷிற்கும் திருமணம் செய்து வைப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் மாலையும் கழுத்துமாக கோபியும், பாக்கியாவும் சிரித்தபடி இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இனியா திருமணமா, அல்லது பாக்கியா கோபி மீண்டும் இணைந்துவிட்டார்களா என்று கேட்டு வருகின்றனர். அப்படி செய்துவிட்டால் இந்த சீரியலில் நோக்கமே போய்விடும் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்