தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு? - சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு

 
tn

தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ttn

கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவக்கூடியது. வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.  தலைவலி, வாந்தி, காய்ச்சல் உடல் வலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.  அதிக காய்ச்சல்,  கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா , பலவீனம்,  பக்கவாதம் , மூளைக்காய்ச்சல் ஆகியவை ஒரு சிலருக்கு ஏற்படும் அண்மையில் கேரளாவில் கோழிக்கோடு , மலப்புரம்,  திருச்சூர் மாவட்டங்களில் பெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

dengue

இந்நிலையில் தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் கொசு பரவலை பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும். பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் . 'க்யூலெக்ஸ்' வகை கொசுக்களால் மனிதர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பரவக்கூடும். மனிதர்களுக்கிடையே பரவும் தன்மை இல்லை என்றாலும், கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். 

tips to prevent dengue fever

வைரஸ் தொற்றுக்கு ஆளாபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசிய பகுதிகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. எலைசா, பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக கண்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.