#BREAKING சென்னையில் வானிலையை கண்காணிக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை

 
s

சென்னையில் வானிலையை கண்காணிக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை அளவை கண்காணிக்கும் சென்னை ரேடார் கருவி தொழில் நுட்பக் கோளாறால் செயல்படவில்லை. ரேடார் கருவி பழுதால் நிகழ்நேர மழை நிலவரம் மற்றும் வானிலை நிலவரத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேடார் செயல்படவில்லை  எனக் கூறப்படுகிறது.

மழைக்காலத்தில் ரேடார் கருவி (Weather Radar) என்பது மழை எங்கு பெய்கிறது, எவ்வளவு தீவிரமாகப் பெய்கிறது, புயல் எந்தத் திசையில் நகர்கிறது போன்றவற்றைக் கண்டறிய உதவும் கருவியாகும்.  எந்தப் பகுதியில் மழை பெய்கிறது என்பதைக் கண்டறியும். லேசான மழையா, கனமழையா என்பதை மதிப்பிட உதவும். புயல் எங்கே உள்ளது, எந்தத் திசையில் நகர்கிறது என்பதைக் கண்காணிக்கும். அடுத்த சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்களில் மழை பெய்யக்கூடிய பகுதிகளை மதிப்பிட உதவும். கனமழை ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து எச்சரிக்கை வழங்க உதவும்.