"சேலத்தை நோக்கி அணிவகுப்போம்; பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
tn

கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பாசிச இருளகற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.

tn

இந்த சுடர், சென்னை - காஞ்சிபுரம் - விழுப்புரம் - கள்ளக்குறிச்சி - சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது. சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ஆம் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளேன்.


கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம் - பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.