விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம் - ஆர்.என்.ரவி

 
rn ravi

கூடிய விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் நேற்று திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் விழாவையொட்டி சென்னையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரத நாடு ஸ்ரீராமர் இல்லாமல் இல்லை, ராமர் எல்லா இடங்களிலும் வசித்து வருகிறார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ராமரை பற்றி தெளிவாக கூறியுள்ளார். ராமர் - பாரதம் - தமிழ்நாடு - மூன்றையும் எவராலும் பிரிக்க முடியாது. 

ராமர் உருவாக்கிய ராஜ்ஜியத்தை போல, பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கி வருகிறார். 10 ஆண்டுகளில் நாட்டு மக்கள் அடி நிலையில் இருந்து மேல் நிலைக்கு வர தொடங்கியுள்ளனர்.  கூடிய விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம். மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவற்றை சுயநலத்திற்காக பிரித்துக் கொண்டிருந்தனர். இனி அவ்வாறு எவராலும் பிரிக்க முடியாது என கூறினார்.