நாம் யார் என்பதை விரைவில் நிரூபிப்போம் - கனிமொழி..!

 
kanimozhi

துாத்துக்குடியில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், கனிமொழி பேசியதாவது: சட்டசபை தேர்தலில் நாம் அடைந்த தோல்வி குறித்து ஆராய வேண்டும். துாத்துக்குடி தொகுதியில், தி.மு.க., தோல்வி அடைந்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அமைச்சராக இருந்த கீதா ஜீவன், மக்களோடு மக்களாக பணி செய்தவர். ஆனாலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கான கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிடம், உண்மை நிலவரங்களை நிர்வாகிகள் கூற வேண்டும்.

சரியான கருத்துகளை சொன்னால் தான், தலைமை முடிவெடுத்து, கட்சியின் கட்டமைப்பை மாற்ற முடியும். கூட்டணி கட்சிகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கூட்டணி இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும். நாம் யார் என்பதை விரைவில் நிரூபிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.