சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம் - அமைச்சர் எ.வ.வேலு

 
ev velu

ஐ.டி சோதனையின்போது அச்சுறுத்தல் நடந்ததாக  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

RAID TTN

தி.மலையில் வருமானவரி சோத்னை நிறைவு பெற்ற நிலையில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு நேரடியாக உள்ள சொத்து 48.33 ஏக்கர்தான்; எனது சொத்துகள் குறித்து வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை; திமுகவினரை குறிவைத்து சோதனை நடத்துவதற்கு அஞ்ச மாட்டோம்
காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

EV Velu

எ.வ.வேலு சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டனர். அதிகாரிகளை குறை கூற விரும்பவில்லை; அம்பு எய்தவர்கள் எங்கோ உள்ளனர் கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளர் நிர்பந்திக்கப்பட்டார்; கேள்வி கேட்பது தவறல்ல,அச்சுறுத்தக்கூடாதுநேர்மையாக சம்பாதித்த பணத்தை கொண்டே அறக்கட்டளை, கல்வி நிறுவனங்களை உருவாக்கினேன் என்றார்.