AI தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை கட்டமைப்போம் - முதல்வர் ஸ்டாலின்..

 
MKStalin

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை கட்டமைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா  புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலில் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர், பின்னர் சிகாகோ சென்று அங்குள்ள  முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை  சந்தித்துப் பேசி வருகிறார்.  

Image

அந்தவகையில், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறிஉத்து அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து BNY MELLON உடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பி.என்.ஒய் மேலன் (BNY MELLON) நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.