நாங்களும் அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளோம்... இதுபோல் நாங்கள் நடந்துகொண்டதில்லை – ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்..!

 
Nainar

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது,

தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்ததை கடுமையாக விமர்சித்துள்ளார்.தற்கு முன்பு எந்த அமைச்சரும் காவல் நிலையத்திற்குச் சென்று எஃப்.ஐ.ஆர் (FIR) விவரங்களை ஆய்வு செய்ததில்லை என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக, கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னை அயனாவரம் பகுதியில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அயனாவரம் காவல் நிலையத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து அவர் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தது விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “நாங்களும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளோம், பல அரசியல் தலைவர்களைப் பார்த்துள்ளோம்; ஆனால் யாரும் காவல் நிலையம் சென்று எஃப்.ஐ.ஆர் விவரங்களை ஆய்வு செய்ததில்லை” என்று தெரிவித்தார். மேலும், காவல்துறையின் செயல்பாடுகளில் அமைச்சர்கள் நேரடியாகத் தலையிடுவது சரியான நடைமுறை அல்ல என்றும், நள்ளிரவில் காவல் அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து விசாரிப்பதாகவும் அவர் சாடினார்.

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் செஞ்சி, கடலூர் பகுதிகளில் குழந்தைகள், பெண்கள் மாயமான விவகாரங்களுக்கு முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்களின் காவல் நிலைய ஆய்வுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.