"கண்டிஷன் Follow பண்ணுங்கன்னு சொன்னோமே"- அருண்ராஜ் பேச பேச அதிர்ந்த அரங்கம்
எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்ற நிலையில் இருக்கும் டிஜிபியால் எப்படி ஸ்ட்ராங்கான முடிவெடுக்க முடியும்? என த.வெ.க கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக பொதுக்குழுவில் உரையாற்றிய கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், “தமிழ்நாடு காவல்துறைக்கு ரெகுலர் டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனைகூட செய்யாமல் முதல்வருக்கு என்ன பெரிய வேலை இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்ற நிலையில் இருக்கும் டிஜிபியால் எப்படி ஸ்ட்ராங்கான முடிவெடுக்க முடியும்? திமுக அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கான பணம் இருக்க, அரசு வரிப்பணத்தை இலவசமாக கொடுத்துவிட்டு நாங்கள் தான் கொடுத்தோம் என பேச வெட்கமாக இல்லையா ?
சமீபத்தில் சகோதரர் அன்பில் மகேஷ் ஒரு performance பண்ணுனாரு,படிச்சு படிச்சு சொன்னேனேடா condition-யை follow பண்ணுங்கனு அது மாதிரி இப்போ K.N நேரு அவர்களிடம் சொல்லலாம் படிச்சு படிச்சு சொன்னோமே rules-யை follow பண்ணுங்கனு இப்போ பாருங்க தேவையில்லாமல் ED உள்ளே வந்துடுச்சு. ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி திராவிட இயக்கத் தலைவர்களை கொச்சைப்படுத்தாதீங்க. நீங்கள் வேண்டுமானால் உங்கள் ஆட்சியை ஸ்டாலின் மாடல் ஆட்சி என்று சொல்லிக்கோங்க. முதல்வர் அவர்களுக்கு சினிமா பார்த்துவிட்டு விமர்சனம் சொல்வதற்கு தான் நேரம் இருக்கிறது. யாருக்கு டெண்டர் கொடுக்கணும் னு first -யே முடிவு பண்ணிட்டு அவங்களுக்கு மட்டும் தான் site inspection certificate கொடுக்கிறீங்க” என சாடினார்.


