வரவிருக்கும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தலில் போட்டி- அண்ணாமலை அறிவிப்பு

 
வரவிருக்கும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தலில் போட்டி- அண்ணாமலை அறிவிப்பு

மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில் சுமார் 11 ஏக்கர் நிலப்பரப்பு ஒரே நேரத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் மாபெரும் “திருவனம்” பசுமை நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, “வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், 2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் வீ தி லீடர்ஸ் போட்டியிடும். 3 மாசத்துல உங்க கையில  இருக்க மை கூட காயல அதுக்குள்ள கட்சி மாறியாச்சு, வேட்டி மாறியாச்சு, ஆட்சி மாறியாச்சு.. இந்த அரசியலை உடைக்க தான் வீ தி லீடர்ஸ் இன்னைக்கு நம்ம களத்திற்கு வந்திருக்கோம். மக்கள் பாதங்களை தொட்டு வாக்கு கேட்கும் வேட்பாளர் இன்னைக்கு எதுக்கு ஓட்டு போட்டமோ அந்த கட்சில இல்லை” என்றார்.