“ஒரு ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தோம்” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர்!
“காசு கொடுத்து ஓட்டு வாங்குறதை உடைச்சிருக்கோம்’’ என விஜய் சொன்ன மூன்றே இரண்டே நாளில், அதை பொய் என உடைத்திருக்கிறார் ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான்.
சேலம் மேற்கு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ₹2000 கொடுத்தோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஓமலூர் த.வெ.க வேட்பாளர்!
— Dr.SG Suryah (@SuryahSG) June 4, 2026
முதல்வர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கு ஒரு நேரடி கேள்வி: ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட நாங்க கொடுக்கல, காசு கொடுத்து ஓட்டு வாங்குறத உடைச்சிருக்கோம் என்று மேடையில் வசனம்… pic.twitter.com/wEU5P2l4mB
சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற தவெக வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார் என சொல்லியிருக்கிறார் ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான். இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், “பக்கத்துல நம்ம சேலம் மேற்கு தொகுதில வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 பணம் தொகுதி முழுக்க கொடுத்தார். அதுதான் நம்ம தொகுதியில நமக்கான வெற்றிவாய்ப்ப டேமேஜ் பண்ணிடுச்சு.. அதுக்கு முன்னாடி வரை மக்கள்கிட்ட நம்மளோட திட்டங்கள் எல்லாத்தையும் கொண்டு சேர்த்தேன் என ஓமலூரில் தோற்ற தவெக வேட்பாளர் அதியமான் கட்சி கூட்டத்தில் ஓபனாக பேசிய வீடியோ வைரலாகிவருகிறது. மேலும் கடைசி 2 நாள்ல எல்லாமே டோட்டலா பெயிலியர் ஆகிடுச்சி, மினிமம் ஆறு ஆயிரம் ஓட்டு பணத்தாலயே போச்சி” என பேசியுள்ளார்.

