நாங்கள் பிரிந்து விட்டோம் : சைந்தவி குறித்து ஜி.வி.பிரகாஷ் பதிவு..!
கடந்த சில நாட்களாக ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி தம்பதி விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக தகவல் வெளிவந்தது. கடந்த 11 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் இருவரும் விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்ல உள்ளனர் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளனர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இத்தகவலை தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். "சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் இருவருக்கும் இதுதான் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு உதவியாக இருக்கும்” எனப் பகிர்ந்துள்ளனர்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024