பீகாரில் ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை - ராகுல் காந்தி..!
Nov 15, 2025, 06:00 IST1763166636000
பீகார் தேர்தல் தோல்வி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது. காங்கிரஸ் கட்சியும் , இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்கள் முயற்சிகளை இன்னும் திறம்படச் செய்யும்.என தெரிவித்துள்ளார் .

