வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடு .- அமைச்சர் உதயநிதி ட்வீட்

 
tn

திமுக இளைஞரணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கழக இளைஞர் அணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம்.


நம் இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்காக இரவு - பகல் பாராது அயராது உழைத்த சேலம் மாவட்ட கழகங்களைச் சேர்ந்த மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளை நிர்வாகிகளுக்கு அவர்களின் பணிகளை போற்றி அங்கீகரிக்கும் விதமாக கணையாழி அணிவித்து மகிழ்ந்தோம்.

கழக வெற்றிக்காக தொடர்ந்து கரம் கோர்த்து உழைப்போம். இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.