யார் யார், எங்கெல்லாம் 'வாங்குகின்றனர்' என்ற பட்டியல் எங்கள் கையில் உள்ளது - நயினார் நாகேந்திரன் அட்டாக்..!!

 
Q

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் துாத்துக்குடியில் .அளித்த பேட்டி:

கர்நாடகாவில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அம்மாநில முதல்வருக்கு கடும் கண்டனங்கள். எந்த மாநில மக்களாக இருந்தாலும், அவர்களின் உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று, நிறைவடைந்த நுாறு நாட்களையும், மக்களுக்கு வேதனையான நாட்களாகவே கருதுகிறேன். இந்த அரசின் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் 'வேலை'யை தொடங்கி விட்டனர்; அனைத்து விதமான விஷயங்களையும் ஆரம்பித்து விட்டனர்.

இதன் அர்த்தம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். யார் யார், எங்கெல்லாம் 'வாங்குகின்றனர்' என்ற பட்டியல் எங்கள் கையில் உள்ளது. முதல்வரிடம் உள்ள துறையில் நடக்கும் டெண்டர் முறைகேடுகள் உட்பட அனைத்து விபரங்களையும் விரைவில் வெளியிடுவோம். இவ்வாறு கூறினார்.