"காவிரி நீரை கேட்க வக்கு இல்லை; திசைதிருப்பவே என் மீது கைது நடவடிக்கை!": திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேச பேட்டி!
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செய்தியாளர் சந்திப்பில் காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைக் கேட்டுப் பெற இந்த அரசுக்கு வக்கு இல்லை விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள், பொய் வாக்குறுதிகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினேன் என பேட்டி அளித்துள்ளார்.
தவெகவினர் மீதான பாலியல் புகார்களில் எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளுக்காக திமுக போராடியதை Divert செய்ய என்னை கைது செய்துள்ளனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை; யாரின் பெயரையும் பயன்படுத்தவில்லை. நான் பேசாத ஒன்றை பேசியதாக கைது செய்துள்ளனர்.
கரூரில் 41 பேரை பலி கொடுத்துவிட்டு ஒரு கட்சியின் தலைவர் அங்கிருந்து ஓடி வந்து, திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகிட்டு ஓடிவிட்டு, சென்னைக்கு சென்றும் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து ஓடினார். அந்தக் கட்சியில் அனைவரும் ஓடிச் சென்றனர். அதே மாதிரி நாங்களும் இருப்போம் என முதல்வர் நினைத்துவிட்டார். விவசாயத்திற்கு காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்றுதான் பேசினேன். எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன். மீண்டும் பேசுவேன். இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன். என்றைக்கும் மக்களையும், பத்திரிகைகளையும் சந்திக்க நாங்கள் அஞ்சியது இல்லை என்று திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டியளித்துள்ளார்.
#JUSTIN | காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைக் கேட்டுப் பெற இந்த அரசுக்கு வக்கு இல்லை
— Sun News (@sunnewstamil) August 4, 2026
விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள், பொய் வாக்குறுதிகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி https://t.co/jXcWBibA1A