நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் - ஈபிஎஸ் விமர்சனம்

 
EPS

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யும் ‘நீங்கள் நலமா' திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தொடங்கி வைத்தார்.பொதுமக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் அரசுத் திட்டங்கள் செம்மைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்டறிவார்கள். முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், "நீங்கள் நலமா" என்று கேட்கும் திரு. @mkstalin அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!


சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!

எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!

இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!என்று குறிப்பிட்டுள்ளார்.