வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கைது

 
ச்

பிக்பாஸ் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாட்டர் மெலன் திவாகர் காதலிக்கும் பெண் இவரா? இவ்வளவு நாள் இது தெரியாம  போச்சே; நெட்டிசன்கள் ஷாக்

"வாட்டர் மெலன் ஸ்டார்" என்று அழைக்கப்படும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர், நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் வாட்டர் மெலனை வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். இந்த காட்சி மூலம் பிரபலமடைந்தவர் தன்னை தானே "வாட்டர் மெலன் ஸ்டார்" என அழைத்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டிய புகாரில் திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கேட்டதாக திவாகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.