“என்னை இரும்பு கம்பியால் அடித்தார்கள்..”- மாகாபா,கானா வினோத், புகழ் மீது வாட்டர் மிலன் திவாகர் போலீசில் புகார்

 
ச்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது தன்னை மா கா பா,கானா வினோத் ஆகியோர் தாக்கியதாக வாட்டர் மிலன் திவாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



சோசியல் மீடியா பிரபலமான வாட்டர் மெலன் சுதாகர் பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்  அதில் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடக்கும் சமையல் குறித்த படப்பிடிப்பிற்காக சென்று படப்பிடிப்பு நடந்த நிலையில் அங்கு தன்னுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கானா வினோத், மாகாபா ஆனந்த், புகழ், அசார் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தன்னை இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கியதாகவும் இதில் தனக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே புகார் குறித்து விளக்கம் அளிக்க நடிகர் புகழ்,கானா வினோத் ஆகியோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.விளம்பரத்திற்காக திவாகர்  இது போன்று செய்து வருவதாகவும் தேவைப்பட்டால் தங்கள் தரப்பிலும் புகார் அளிப்போம் என தெரிவித்ததாக காவல் தரப்பில் கூறியுள்ளனர்.