சென்னை மக்களே உஷார்- அக். 10ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் 3 மண்டலங்களில் அக்டோபர் 10இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் அக்.10 காலை 9 மணி முதல் அக்.11 காலை 9 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சில பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்படும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தில் ( chennaimetrowater.tn.gov.in) முன்பதிவு செய்து, லாரி மூலம் குடிநீர் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

