சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!

 
water

மெட்ரோ பணி காரணமாக  7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

metro water

மெட்ரோ பணி காரணமாக 2 நாட்களுக்கு அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது நேற்று  இரவு 9 மணி முதல் ஏப், 27ஆம் தேதி இரவு 9 மணி வரை 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.  மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது  என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

chennai water

எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.