10 லட்சம் வீண்? இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

 
ச்

கோயிலில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டுக்கு வராததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி பாபநாசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோயிலுக்கு தினமும் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த கருவி அமைக்கப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டுமே  பக்தர்கள் பயன்பெறும் வகையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்த சுத்திகரிப்பு கருவி பக்தர்களுக்கு பயன்படாமல் உள்ளது. இதனால் பக்தர்களுக்காக 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவி அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடைகளில் வாட்டர் பாட்டில் வாங்கி குடிக்கும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. 

விடுமுறை தினத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி கூட இல்லாத நிலையில் வெளியே உள்ள கடைகளில் குடிநீர் பாட்டில் ஜோராக விற்று வருகிறது. ஒருவேளை கடைகளில் குடிநீர் பாட்டில் விற்க வேண்டும் என்பதற்காக சுத்திகரிப்பு கருவியை அப்படியே விட்டு விட்டார்களா என்ற சந்தேகமும் உள்ளது. புதிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.