வைகையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
Nov 10, 2023, 11:07 IST1699594647912
வைகையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்குநாளொன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீரின் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வைகையிலிருந்து அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.