அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' நடைமுறை அடுத்த வாரம் அமல்
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் 'வாட்டர் பெல்' நடைமுறை அடுத்த வாரம் அமல் படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் 'வாட்டர் பெல்' நடைமுறை அடுத்த வாரம் அமல் படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களை காக்க இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 5 நிமிட இடைவெளியில் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணி என 3 முறை வாட்டர்பெல் அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாட வேலைகளில் 2-3 நிமிடங்கள் வரை தண்ணீர் குடிக்க மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் நீர்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கவே வாட்டர் பெல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


