பெண்களே உஷார்..!! இப்படி பண்ணா கம்பி தான் என்னனும்..! இன்ஸ்டாவில் எல்லை மீறி போகும் குடும்ப பெண்கள்..!!

 
Q

சமூக வலைதளங்களில் இன்புளுயன்சர்களாக உள்ளவர்களின் லைப் ஸ்டைலை பார்த்து பலரும் யூடியூப்பில் , இன்ஸ்டாவில், பேஸ்புக்கில் வீடியோ போடுவது அதிகரித்துள்ளது. பேஸ்புக், யூடியூப்பில் கூட ஓரளவு கட்டுப்பாடுகள் உள்ளன.கண்டபடி வீடியோக்கள் போட முடியாது. ஆனால் இன்ஸ்டாவிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை..

 

அதில் விளம்பரங்கள் மூலம் லட்சங்களை சம்பாதிக்க ஆசைப்படும் இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் கண்டதையும் வீடியோவாக போடுகிறார்கள்.தினமும் காலை எழுந்தது காபி குடிப்பது போல், பக்கத்து வீட்டு விஷேசத்திற்கு போவது, கணவன் மனைவி சண்டை, கணவன் மனைவி இடையே கேலி கிண்டல் செய்து பேசுவது வரை, மகன் , மகளுக்கு சாப்பாடு கொடுத்துவிடுவது, மாமியார் சொன்ன கதை, மாமானார் சொன்ன கதை, பக்கத்து வீட்டு பார்வதியின் வளைகாப்பு வரை எல்லாமே கண்டென்ட் தான் அவர்களுக்கு..படுக்கைக்கு செல்வது வரை எல்லாவற்றையும் கண்டென்ட் ஆக பார்க்கிறார்கள். வியூஸ்க்காக எல்லை மீறி அன்றாட வாழ்க்கையை பகிருகிறார்கள்.. 

 

இன்றைக்கு சிலர் சமூக வலைதளங்களில் சப்ஸ்கிரைப் செய்து பார்ப்போருக்கு, கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள்.இன்னும் சிலர் வீடியோ வெளியிட்டும் சம்பாதிக்கிறார்கள். 

ஆனால் பாலியல் ரீதியாக தூண்டும் வகையில் உடல் பாகங்கள் தெரியும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது, அதன் மூலம் சப்ஸ்கிரைப் செய்ய வைத்து பணம் சம்பாதிப்பது என்பது இந்திய சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும்.

2000ம் ஆண்டு போடப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67ன்படி, மின்னணு வடிவத்தில் (வீடியோ, படம், எழுத்து) பாலியல் ரீதியான ஆபாசமான விஷயங்களை வெளியிடுவது அல்லது பரப்புவது குற்றம் ஆகும். இந்த குற்றத்திற்கு முதல் முறை 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்தால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67Aவின் படி, வெளிப்படையான பாலியல் செயல்கள் அல்லது ஆபாசமான வீடியோக்களை வெளியிடுவது, பரப்புவது அல்லது ஒளிபரப்புவது குற்றம் ஆகும். இதற்கு முதல் முறை 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67Bயின் படி, குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்கள் அல்லது படங்களை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது அல்லது பார்ப்பது போன்ற செயல்கள் மிகக் கடுமையான குற்றம் ஆகும். இதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.