10-ஆம் வகுப்பு மாணவர்களே கவனிங்க! முதல் தேர்வைத் தவிர்க்க முடியாது - சி.பி.எஸ்.இ எச்சரிக்கை..!

 
1 1

 சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 17 முதல் துவங்க உள்ளன. இதில், 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், தேசிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், குழப்பம் நிலவுகிறது. முதல் தேர்வு எழுதாமல், இரண்டாம் தேர்வை மட்டும் எழுதலாமா என, சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள விளக்கம்: வரும் மே 15 முதல், ஜூன் 1 வரை நடக்க உள்ள இரண்டாம் பொதுத்தேர்வில், அதிகபட்சமாக மூன்று பாடங்களை மட்டுமே எழுத முடியும். இந்த தேர்வு, மதிப்பெண் அதிகரிப்புக்காக வழங்கப்படும் வாய்ப்பு. எனவே, முதல் பொதுத்தேர்வில் அனைவரும் பங்கேற்பது கட்டாயம். இரண்டாம் தேர்வில், விருப்பமுள்ளோர் மட்டுமே பங்கேற்கலாம். முதல் தேர்வு எழுதாமல், இரண்டாம் தேர்வை எதிர்கொள்ள முடியாது. இரண்டு தேர்வுகளை எழுதினால், ஒரு பாடத்தில், எந்த தேர்வில், அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அது கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement