விண்வெளியில் இருந்து பூமி எப்படி மின்னுது பாருங்க! இந்திய விண்வெளி வீரர் பகிர்ந்த பிரமிப்பூட்டும் வீடியோ!
தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கும் மக்களுக்கு பிரமிக்க வைக்கும் வகையில், விண்வெளியில் இருந்து பூமி அழகாக ஒளிரும் ஒரு அற்புதமான வீடியோவை சமூக வலைதளத்தில் சுபான்ஷு சுக்லா பகிர்ந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்துவிட்டு பூமிக்குத் திரும்பியவர். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர், விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அவர் வெளியிட்டு பதிவில் கூறியிருப்பதாவது: தீபாவளி எப்போதும் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான, எனக்குப் பிடித்தமான பண்டிகை. அந்த விளக்குகளின் மாயாஜாலமும், பட்டாசுகளின் ஒளிரும் அழகும் எப்போதும் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருக்கிறது.
விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்தபோது, இந்த மின்னல்கள் பிரபஞ்சம் தன் சொந்த பாணியில் கொண்டாடும் இயற்கை பட்டாசுகளாக எனக்குத் தெரிந்தன. இந்த அதிசயக் காட்சியைப் பகிர்ந்து கொள்ள தீபாவளியை விடச் சிறந்த நாள் வேறு எதுவும் இருக்க முடியாது.
விண்வெளியிலிருந்து கீழே பார்க்கும்போது, அவை இயற்கையின் சொந்த பட்டாசுகளைப் போலத் தோன்றின.
எனது நண்பர்கள் அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த பண்டிகைக் காலம் உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் ஒளி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
Diwali has always held a special place in my heart and has been my favourite festival for as long as I can remember. There is something about the magic of lights, the sparkle and the fireworks that fills me with a sense of wonder and joy. While in space, I captured this video and couldn’t help noticing the flashes of lightning dancing across the Earth below. Looking down from space, they reminded me of nature’s very own fireworks — a beautiful, unexpected reminder that the universe has its own way of celebrating light. It felt particularly special to come across this sight, and I couldn’t think of a more fitting day to share it. Wishing all my friends and their families a very Happy Dhanteras. May this festive season fill your homes and hearts with light, happiness, good health and prosperity. #shux #space #shubhanshushukla #india #axiom4
— Shubhanshu Shukla (@gagan_shux) November 6, 2026