சீமான் வீட்டில் அத்துமீறிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்

2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இதில் வரும் 3 ஆம் தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீமான் வீட்டில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு எதிராக வாரண்ட பிறப்பித்து தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சோமமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நீலாங்கரை காவல் ஆய்வாளாராக உள்ள பிரவீன் ராஜேஷ் மாதா மாதம் நீதிமன்றத்தில் அனுப்பட்ட சம்மன்களுக்கு பதிலளிக்காமல் அலட்சியமாக இருந்து உள்ளார். இதனால் இந்த வழக்கில் மார்ச் மூன்றாம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென பிறப்பித்து தாம்பரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பார்த்திபன், “தாம்பரம் நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல சம்மன்கள் வழங்கப்பட்ட பிறகும் இதுவரையில் எதற்கும் ஆஜராகவில்லை, தாம்பரம் நீதிமன்றத்தை பொறுத்தவரையில் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி. இந்த முறையும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு என்னுடைய கட்சிக்காரர் ஒருவரை அவதூறாக பேசியதை தட்டி கேட்ட வழக்கறிஞரான பார்த்திபன் ஆகிய எண்ணையும் தகாத வார்த்தையில் பேசி அராஜகமாக நடத்தியது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆஜர்படுத்த வேண்டி இருந்தும் உயர் காவல் அதிகாரி என்பதால் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் மூன்றாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆஜராகவில்லை என்றால் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தொடர்பாக மனு கொடுக்க உள்ளேன்” என தெரிவித்தார்.