வெளியான எச்சரிக்கை அறிவிப்பு - நாளை ZERO TOLERANCE DAY
சென்னையில் நாளை (அக்.31) போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக, ZERO TOLERANCE DAY கடைப்பிடிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர் முழுவதும் 31.10.2026 (சனிக்கிழமை) அன்று போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக “விதிமீறல்களற்ற நாள்” கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம், சென்னை பெருநகரின் அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் சிறப்பு தணிக்கை மற்றும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு. போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும். போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதுடன், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள், போக்குவரத்து விதிகளைத் தவறாது கடைப்பிடிக்கவும், போக்குவரத்து சிக்னல்களை மதித்து நடக்கவும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியவும் (Wear Helmets), நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இருக்கைப் பட்டை அணியவும் (Wear Seat Belt) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டுவதைத் (Avoid Dangerous Drive) தவிர்க்கவும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசிகளை (Avoid Cell Phone Driving) பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் போக்குவரத்துக் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான “வீதிமீறல்களற்ற நாள்‘‘ (Zero Tolerance of Traffic Violations) நடவடிக்கை வெற்றியடைய ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

