பாக்கெட் உணவுகளுக்கு எச்சரிக்கை லேபிள்- உச்சநீதிமன்றம் அதிரடி

 
supreme court

அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் முன்புற எச்சரிக்கை லேபிள்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் FSSAI க்கும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.


அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள் ஏன் இருக்கக்கூடாது? எச்சரிக்கை லேபிளுக்கு பதிலாக தினசரி பரிந்துரைக்கப்படும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை மட்டும் குறிப்பிடும் FSSAI முன்மொழிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், உணவு உற்பத்தி நிறுவனங்களின் அழுத்தத்திற்கு FSSAI பணிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.

பாக்கெட் உணவில் உள்ள தகவல்களை கணக்கிட்டு பார்க்காமல், ஆபத்தை உடனடியாக அறிய எச்சரிக்கை லேபிள் தேவை என மனுதாரர் தரப்பு வாதத்தை முன்வைத்தார். பாக்கெட் உணவில் உள்ள சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பரிந்துரைக்கப்பட்ட வரம்புடன் ஒப்பிட்டு மக்கள் கணக்கிட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என மனுதாரர் தரப்பு வாதத்தை முன்வைத்தார். குழந்தைகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.