பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!!

 
rain

ஜாவத் புயல் காரணமாக பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில்  கடந்த 30ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதுடன்,  நேற்று புயலாக உருவெடுத்தது.  இதற்கு ஜாவத் என்று பெயரிடப் பட்டுள்ள நிலையில்,   வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நகர்ந்து  புரி அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு கடல் ஒடிசா கடலோரப் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain

இதன் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ,விஜயநகரம், விசாகப்பட்டினம், ஒடிசாவில் கஜபதி, கஞ்சாம், புரி, ஜகத்சிங்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அசாம், மேகாலயா ,திரிபுரா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

rain

இந்நிலையில் ஜாவத்  புயலை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  புயலின்போது ஒடிசா கடற்கரை பகுதிகளில் 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன் காரணமாக ஆந்திரா -  ஒடிசா வழித்தடத்தில் செல்லும்  95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் 64 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.