சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உற்சாக வரவேற்பு அளித்தார்.
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்து கொண்டு இசையமைப்பாளர் இளையராஜா சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உற்சாக வரவேற்பு அளித்தார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாஜக, விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வரவேற்பு
அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, மலர்ந்த முகத்தோடு என்னை வழியனுப்பி வைத்தது மகிழ்ச்சி. என்னுடைய இசை குறிப்புகளை சரியாக இசைக் கலைஞர்கள் வாசித்தார்கள். சிம்பொனி - அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி ரசித்தனர். சிம்பொனி இசையை கைத்தட்டி ஆரவாரம் செய்தது மகிழ்ச்சி. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த விஷயமாக சிம்பொனி மாறியது. தமிழக மக்கள் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.