எஸ்.ஐ.ஆரில் சந்தேகமா?- 'வார் ரூம்' எண் 08065420020-ஐ தொடர்புகொள்ளவும்

 
ச்

எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலேக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட  செயலாளர்கள் மட்டுமல்லாது, தொகுதி பார்வையாளர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் SIR குறித்து களத்தில் சந்திக்கும் சவால்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுடன் மற்றவர்களுக்கு உதவும் சிறப்பாகவும் எளிமையான வழிமுறைகள் குறித்து  விவாதிக்கப்பட்டது.

மேலும் முதலமைச்சர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, மீண்டும் திமுக ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பாஜக செய்து வருகிறது. தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள SIR ஆபத்து என்பது  பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விகுறியாக்கியுள்ளது. நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, திமுகவினர் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திட வேண்டும், ஜனநாயகத்தை பாதுகாக்க அண்ணா அறிவாலயத்தில் தொடங்கப்பட்டுள்ள 'வார் ரூம்' எண் - 08065420020-ஐ மக்கள் தொடர்பு கொள்ளலாம்” என முதல்வர் அறிவுறுத்தினார்.