தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது - அமைச்சர் ஷாஜகான் உறுதி..!!

 
Q

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது,

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்.

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்வதில் பல சவால்கள் உள்ளன. அதிகாரிகள் இயன்றவரை அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். விடுபட்டவைகள் பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். வக்ப் சட்டத்திருத்தத்தில் பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், செல்வந்தர்கள், மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் பெருகத் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரால் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃபு சொத்துக்களாகும். அவை அசையும் சொத்துக்களாகவும், அசையாச் சொத்துக்களாகவும் இருக்கின்றன. இந்தச் சொத்துக்களைக் கண்காணிப்பதற்காகவும், அதில் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டங்களை அரசு 1954இல் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் 1958இல் ஏற்படுத்தப்பட்டன.

இச்சட்டங்கள் பின்னர் 1995இல் விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில்தான், வக்ஃபு வாரியத்தின் நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்திடவும், வக்ஃபு வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்ஃபு சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.