எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா? ரூ.5000 இருந்தால் போதுமானது

போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது. அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும். அது நடக்குதுங்க...
எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா?
— Dr S RAMADOSS (@drramadoss) September 19, 2023
ரூ.5000 இருந்தால் போதுமானது
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது. அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள்…
நல்லா நடக்குதுங்க! தமிழ்நாட்டில் போலியான சாதிச் சான்றிதழ்களை பணம் கொடுத்து வாங்கி, இட ஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்களும், இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் கொடுமை நடக்குதுங்க... நல்லா நடக்குதுங்க " என்று குறிப்பிட்டுள்ளார்.