கிளாம்பாக்கம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் - டெண்டர் வெளியீடு

 
tn

கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

kilambakkam

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மக்கள் மாநகரப் பேருந்துகள் மூலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் மாநகர பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கிருந்து ஊருக்கு செல்கின்றனர். 

tn govt

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும்; டெண்டருக்கு பிப்.14 கடைசி நாள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.