"இன்னையோட 22 நாள் ஆகிடுச்சு… சின்ன ஒரு ஆதாரம் கூட கிடைக்கல.."- தீபாவளி டிரெஸ் உடன் காத்திருக்கும் தாய்

 
s

காணாமல் போய் 22 நாட்களாக தேடப்படும் 7 வயது சிறுமிக்காக அவரது தாய் தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து கண்ணீருடன் காத்திருக்கிறார். 

செஞ்சி அருகே காணாமல் போய்  22 நாட்கள் ஆன தனது மகளுக்கு தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்துள்ள அவரது தாய் பவானி, மகளின் வருகைக்காக  கண்ணீருடன் காத்து இருக்கிறார்.    கடந்த மாதம் 12 ஆம் தேதி அதிகாலை சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையிலும் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாய், "இன்னையோட 22 நாள் ஆகிடுச்சு… சின்ன ஒரு ஆதாரம் கூட கிடைக்கல.. ஆனா அதிகாரிங்க குழந்தைய கண்டுப்பிடிக்காம போக மாட்டோம்னு சொல்றாங்க.. என் பொண்ண எப்படியாச்சு கண்டுப்பிடிச்சு கொடுங்க.. குழந்தையை சீக்கிரம் கண்டுபிடிச்சி கொடுங்க.. இரவு 2 முறை 'அம்மா அம்மா' என குழந்தை அழுததாக பக்கத்துவீட்டுக்காரர்கள் சொல்லுகின்றனர். யார் மேலும் எனக்கு சந்தேகம் இல்லை" என்றார்