டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு
Sep 23, 2026, 21:55 IST1790180717211
டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இப்புதிய உத்தரவின்படி, விற்பனையாளர்களுக்கு ரூ.10,871 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், இந்த ஊதிய உயர்வு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சூப்பர்வைசர்களுக்கு சம்பளம் ரூ.33,023 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு சம்பளம் ரூ.30,284 ஆகவும் உதவி விற்பனையாளர்களுக்கு சம்பளம் ரூ.28,680 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

