வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்
Sep 18, 2026, 17:00 IST1789731022566
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக MGM மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுக்கு செப்.9ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர், சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக MGM மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், சிகிச்சைக்கு வி.எஸ்.பாபு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் MGM மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

