கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் தலையீடு உள்ளது- விபி துரைசாமி

 
vp duraisamy

மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தோளில் பூச்சி உட்கார்ந்ததாக நினைத்து எம்.ஆர் காந்தி தட்டிவிட்டார் விபி  துரைசாமி விளக்கம் - VP Duraisamy gives clarification about controversy as  BJP MLA MR Gandhi insulted ...

ஆர்ப்பாட்டத்திற்கு பின் பாஜக மாநில துணை தலைவர் திரு.வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மின் கட்டண உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை, யாரும் வருத்தப்பட வேண்டாம் என துறை சார்ந்த அமைச்சர் கூறுகிறார். மின்கட்டண உயர்வு 12 % இருந்து 51 % வரை உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறுகின்ற மானியத்தை வைத்துக்கொண்டு மின்சார உற்பத்திக்கு செலவழிக்கவில்லை, வேறு எதற்கோ செலவழித்து விட்டு இந்த துறைக்கு கடன் வந்து விட்டது போல் கூறுகின்றார். மின்சார கட்டண உயர்வுக்கு கடந்த கால ஆட்சித்தான் காரணம் எனவும் அவர் கூறுகிறார். மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்தால் தான் உயர்த்தப்பட்டது என்பது சிறுபிள்ளை தனமாக உள்ளது.

தேர்தல் வாக்குறுதியில்  மின்கட்டணம் உயர்த்தப்படாது என முதல்வர் வாக்குறுதி அளித்தார். தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி வகிக்கின்ற துறையில் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அறிவிக்கப்படாமலேயே திடீர் திடீரென  உயர்த்தப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் கடந்த கால ஆட்சி, மத்திய அரசை காரணம் காட்டி விலையை உயர்த்துகின்றனர் . மற்ற மாநிலங்களை விட மின்சார கட்டணம் குறைவு என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நியாயப்படுத்துகின்றார். மின்கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

மின்கட்டண உயர்வுக்கு என்ன அவசியம் என கேட்டால் அமைச்சர் பெட்ரோல், கேஸ் விலை உயர்வு குறித்து பேசுகிறார். கொரோனா காலத்தில் 200 கோடி தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலமான 3 ஆண்டு காலத்தில் மத்திய அரசு எவ்வளவு வருமானம் இழந்துள்ளது. அந்த காலத்தில் அரிசி, சர்க்கரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை சரியில்லாததற்கு கள்ளக்குறிச்சி சம்பவமே சாட்சி. சட்ட, ஒழுங்கு பிரச்சினை இருந்த காரணத்தால் தான் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சரியான நேரத்தில் மாவட்ட ஆட்சியர் சரியான முறையில் கையாளவில்லை.  இதனால் தான் இவ்வளவு பெரிய வன்முறை நடந்துள்ளது.கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் தலையிடும் உள்ளன” எனக் கூறினார்.