#BREAKING மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கிய நிலையில், 1 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 55.18 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. தாராபுரத்தில் 56.09 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 70.31 சதவீதம் வாக்குகளும், தாராபுரத்தில் 68.08 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. மதுராந்தகத்தில் மொத்தமொள்ள 2,13,788 வாக்காளர்களில் 1,50,308 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதேபோல் தாராபுரத்தில் மொத்தமுள்ள 2,23,306 வாக்காளர்களில் 1,52,027 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

